விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் விவரங்களை தயாரித்து வரும் தாலிபான்கள்!
விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஆப்கன் பெண்களின் பட்டியலை தயார் செய்து வரும் தாலிபான்கள் அவர்களுக்கு என்ன விதமான தண்டனை கொடுக்கப்போகிறார்கள் என பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் அடுத்த ஆட்சி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாலிபான்கள்ஆட்சி அதிகாரத்தை கை பற்றும் போது பெண்களுக்கு உரிய சுதந்திரத்தை கொடுக்காமல் பெண்களுக்கு கொடுக்காமல் போகலாம் என பலரும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தங்களை வேலைக்கு செல்ல அனுமதி வேண்டும் என சில பெண்கள் தைரியமாக சாலையில் வந்து போராடியிருக்கும் நிலையில் ஆப்கானில் பெண்களுக்கு தாலிபான் ஆட்சி அதிகாரத்தில் பிரநிதித்துவம் கிடையாது என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஆப்கானிஸ்தான் பெண்கள் யார் யார் என கண்டறியும் பணியில் தாலிபான்கள் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காகவே விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது