ஆதிக்கம் செலுத்தும் தலிபான்கள் : அச்சத்தில் காபூல் காரணம் என்ன?

afghanistan taliban
By Irumporai Aug 13, 2021 10:57 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாணங்களை கைப்பற்றியுள்ளனர்.  ஆப்கானிஸ்தானில்அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன

 இதனால் ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள், அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.நேற்று நடத்திய தாக்குதல் வாயிலாக மூன்று மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினர்.

ஆதிக்கம் செலுத்தும் தலிபான்கள் : அச்சத்தில் காபூல்  காரணம் என்ன? | Taliban Major Cities Raced Afghanistan

தற்போது தலிபான்கள் வசம்  13 மாகாணங்கள்  வந்துள்ளன. மாகணங்களில் உள்ள அரசு அதிகாரிகள், தலிபான்களிடம் சரண் அடைந்தனர். அரசு கட்டடங்களில் தலிபான் கொடி ஏற்றப்படுகிறது. மேலும்  ஆப்கானின் முக்கிய நகரங்களான  காந்தகார், ஹீரட் நகரங்களை கைப்பற்றிய தலிபான் படையினர் அங்குள்ள கவர்னர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கனில் தலிபான்கள் கைப்பற்றிய நகரங்களில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக் கானோர் தலைநகர் காபூலில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

தலிபான்கள் காபூலை நெருங்கி  வருவதால் எந்த நேரத்திலும் காபூல் தலிபான்கள் வசம் வந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. நிலைமை மோசமானதை அடுத்து அமெரிக்கா, ஆப்கனில் உள்ள அதன் துாதரக அதிகாரிகளை பத்திரமாக அழைத்து வர, 3,000 ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன், 600 ராணுவத்தினரை அனுப்பி, தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர உள்ளது. கனடா, ஆப்கனில் உள்ள அதன் துாதரக அதிகாரிகளை அழைத்து வர, சிறப்பு அதிரடி படையை அனுப்ப உள்ளது.

இதற்கிடையே மேற்காசிய நாடான கத்தாரில் தலிபான் - ஆப்கன் அரசு இடையிலான பேச்சில் முன்னேற்றம் இல்லை. அதிகார பகிர்வுக்கு ஆப்கன் அரசு சம்மதித்த போதிலும், அதை தலிபான்கள் ஏற்காததால் பேச்சில் சுமூக தீர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, தாங்கள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள பெண்களை தலிபான்கள் குழு கட்டாய திருமணம் செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், தலிபான்களால் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பிடிபட்ட அரசுப் படை வீரர்களுக்கு மரண தண்டனை அளித்து வருவதுடன், அங்குள்ள பொதுமக்கள் மீது தலிபான்கள் தாக்குதல்கள் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.