ஆப்கான் போர் பிரச்சினைய நாமே பேசி தீர்த்துக் கொள்வோம் : தலிபான் தகவல்

war taliban hibatullahakhundzada polotical
By Irumporai Jul 19, 2021 03:49 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் போருக்கு அரசியல் தீர்வு காண தங்களின் இயக்கம் தயாரக இருப்பதாக தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுண்ட்சாதா தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக தலிபான்கள் நடத்தி வரும் தாக்குதல் உலக அளவில் பேசு பொருளானது , குறிப்பாக இந்திய பத்திரிக்கையாளர் மரணத்திற்கு பிறகு உலக அளவில் விவாதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் அந்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுண்ட்சாதா ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஆப்கானிஸ்தானின் பல மாவட்டங்களிலும் தற்போது தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் தோஹாவில் மீண்டும் தொடங்கின

இந்த கூட்டத்தில் பேசிய தாலிபன் இயக்க தலைவர் அகுண்ட்சாதா இராணுவ போராட்டத்தில் எங்களுக்கு முன்னேற்றங்கள் நன்றாக உள்ளது.

அதே சம்யம் இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தானி ல் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட விரும்புகிறோம் .

ஆகவே எங்கள் தலிபான் இயக்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக உள்ளது.

மேலும், வெளிநாட்டினரை சமாதானத்திற்கு நாடாமல் நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோம், நெருக்கடியிலிருந்து நம் தாயகத்தை மீட்போம் என்பதுதான் எங்கள் செய்தி என தெரிவித்துள்ளார்.