விளையாட்டுப் பொருளாக மாறிய அமெரிக்க போர் விமானம் - தாலிபான்கள் அட்டகாசம்
அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் விட்டுச்சென்ற போர் விமானங்களை தாலிபான்கள் விளையாட்டு பொருளாக மாற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு , ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
நாளை அந்த அமைப்பினரின் பிரதமர், துணைபிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய புதிய அரசு பதவியேற்க உள்ளது. அதேசமயம் அமெரிக்க படைகள் போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்களை அப்படியே விட்டுச்சென்றனர்.
அதனை ஏற்கனவே செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. ங்கு நிறுத்தப்பட்டிருக்கும் போர் விமானத்தின் இறக்கையில் நீண்ட கயிரை கட்டி தாலிபான்கள் உற்சாக மிகுதியில் ஊஞ்சல் ஆடுகின்றனர்.
தாலிபான்களை ஒடுக்க அமெரிக்கா கொண்டு வந்த போர் விமானம் அவர்களுக்கே விளையாட்டு பொருளாக மாறியுள்ளதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.