3 பேரை தூக்கில் தொங்கவிட்டு தாலிபான்கள் அட்டகாசம்
ஆப்கானிஸ்தானில் கிரேன் மூலம் 3 பேரின் உடல்களை தாலிபான்கள் தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆட்சியதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். அங்கு தாலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் அரசு இன்னனும் பதவி ஏற்காமல் உள்ளது.
இதனிடையே சமீபத்தில் அங்குள்ள ஹெராட் மாகாணத்தில் உள்ள ஒபே மாவட்டத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கச் சென்ற இடத்தில் கையும், களவுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து மூன்று கொள்ளையர்களையும் தாலிபான்கள் பிடித்துச் சென்று விட்டனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் கொலை செய்த தாலிபான் அமைப்பினர் ஹெராட் மாகாணத்தின் முக்கிய இடத்தில் பட்டப் பகலில் கிரேன் இயந்திரம் மூலம் அவர்களது உடல்களை தூக்கில் தொங்கவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதேபோல் சில நாட்களுக்கு முன்பு கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை பட்டப்பகலில் தாலிபான்கள் தூக்கில் தொங்கவிட்டது குறிப்பிடத்தக்கது,