சுடுகாடாகும் ஆப்கானிஸ்தான்- ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Afghanistan Taliban fighters Taliban Afghanistan
By Petchi Avudaiappan Aug 17, 2021 07:08 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 ஆப்கானிஸ்தானில் உள்ள பூங்கா ஒன்றில் தாலிபான் அமைப்பினர் ராட்டினம் ஆடி விளையாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் 20 ஆண்டுகளாக அடங்கி இருந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர்.

தாலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதன் வீடியோ உலக நாடுகளை பதற்றத்திற்குள்ளாக்கி வரும் நிலையில், ஆங்காங்கே தாலிபான்கள் துப்பாக்கி சூடும் நடத்தி வருகின்றனர்.

இதனால் ஏராளமான பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு சென்ற தாலிபான்கள் அங்குள்ள ராட்டினங்களில் ஏறி விளையாடும் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.