சுற்றி அவ்வளவு பேர்; மைதானத்தில் 2 பேருக்கு மரண தண்டனை - உலுக்கிய சம்பவம்!
பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை
கடந்த 2021ல் அமெரிக்க படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதிலிருந்து, பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரை கல்வி கற்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
வேலை, கேம் சென்டர், ஜிம், பூங்கா, புல்வெளி அமைந்த ஹோட்டல், பியூட்டி பார்லர் என இவற்றிற்கெல்லாம் அனுமதி மறுக்கப்பட்டு பல அடக்குமுறைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஐநா உட்பட உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும்போதிலும், தாலிபன்கள் செவிசாய்த்தப்பாடில்லை.
ஐ.நா கண்டனம்
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கசையடி தருவது, கை, கால் துண்டிப்பது, உயிரை எடுப்பது போன்ற கொடூர தண்டனைகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், குற்றவாளிகள் இருவரும் தனித்தனி வழக்குகளில் கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள்.
அவர்களது தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதையடுத்து அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவர் மீது 8 குண்டுகளும், மற்றொருவர் மீது 7 குண்டுகளும் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்த செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.