ஆப்கானில் அதிகரிக்கும் தாலிபான்கள் ஆதிக்கம்.. தனது மக்களை உடனே அழைக்கும் பிரான்ஸ்!
ஆப்கானில் தாலிபான்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஜூலை 17ஆம் தேதி கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புமாறு கபூலில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதையடுத்து,தலிபான்கள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஆகவே பிரன்ஸ் தனது நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் மக்கள் ஜூலை 17ஆம் தேதி பிரான்ஸுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படும் எனவும், அதில் பிரான்ஸ் மக்கள் நாடு திரும்பும் மாறும் கூறியுள்ளது.
ஆப்கானில் உள்ள தங்களது படைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் முழுமையாக வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், தலிபான் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பல முக்கிய இடங்களை தலிபான்கள் கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கி வருகின்றன.