உடலை கிரேனில் தொங்கவிட்டு .. தாலிபன்களின் கொடூரத் தண்டனை

deadbody taliban afghan
By Irumporai Sep 25, 2021 08:48 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்கா வெளியேறிய பின்னர் தலிபான்கள் தலைமையில் அங்கு புதிய ஆட்சி அமையவுள்ளது. 

கிட்டதிட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில், தாலிபான் அரசு ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக அமைந்து இருக்கும் இந்த அமைச்சரவையில் பிரதமராக முல்லா முகமது ஹசன் பதவி ஏற்றுள்ளார்

. துணை பிரதமராக அப்துல் கனி பரதார் பதிவு ஏற்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுவான வெளியில் மக்களை கொன்று சடல்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் நகரிலே நடைபெற்று உள்ளது.

ஹெராட் நகரின் மையப் பகுதியில் 4 உடல்களை , தலிபான்கள் கிரேன் மூலம் கட்டி தொங்கவிட்டனர். கடத்தல் சமந்தமான குற்றம் செய்த காரணத்திற்காக நால்வரும் கொடூரமான முறையில் கொள்ளப்பட்டு உள்ளனர். இதனை நேரில் பார்த்த அந்த பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதில், "கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் சடலங்களை ஹெராட் நகரின் வெவ்வேறு பகுதிகளில் தலிபான்கள் தொங்கவிட்டனர். பின்பு இது தொடர்பான செயல்கள், கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இனிமேல் இது தான் கதி" என எழுதப்பட்டு உயிரிழந்தவர்களின் மேல் போஸ்டராக ஓட்டப்பட்டு இருக்கிறது.

ஹெராட் நகரின் பொது இடங்களில், திலிபான்கள் இது போன்று கிரேனில் 4 பேர் தொடங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆப்கானிஸ்தான் மக்கள் குற்றத்தில் ஈடுப்பட்டல் அவர்களது கை, கால்கள் வெட்டப்படும் என தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்