சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அப்போ அமெரிக்காவின் ஒப்பந்தம் அவ்வளவுதானா?

china taliban commit america condition
By Anupriyamkumaresan Sep 04, 2021 10:43 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஒன்றிணைந்து சண்டையிட பாகிஸ்தான் தன்னுடைய ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சூழ்நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் உடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை  உறுதிப்படுத்துவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருக்கிறது.

சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அப்போ அமெரிக்காவின் ஒப்பந்தம் அவ்வளவுதானா? | Taliban Commit With China America Condition

இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்ற தாலிபான்கள் சீனா தங்களுடைய மிக முக்கிய கூட்டாளி என்று தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் சீனா எங்களுடைய முக்கிய கூட்டாளியாக ஆப்கானிஸ்தானை பொருளாதாரரீதியாக பலப்படுத்துவதற்கு சீனாவை நாங்கள் நம்பியிருக்கின்றோம் சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலித்து வருகிறது.

சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அப்போ அமெரிக்காவின் ஒப்பந்தம் அவ்வளவுதானா? | Taliban Commit With China America Condition

பொருளாதாரத்தை வெளிப்படுத்துவதற்கு நீதியை அளிக்க தயாராக உள்ளது என கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் இருக்கின்றன சீனாவின் உதவி காரணமாக, அவற்றை மீண்டும் நாங்கள் செயல்பட வைக்கலாம், நவீனமயமாக்கலாம், அத்துடன் சீனாவின் மூலமாக உலகில் இருக்கின்ற சந்தைகளுக்கு எங்கள் தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம், சீனா ஆப்பிரிக்கா ,ஆசியா மற்றும் ஐரோப்பா உடன் பயிற்சி செய்யும் சீனாவின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என அவர் கூறியிருக்கிறார்.