மீண்டும் மோதும் தாலிபன்கள் ஐ.எஸ்.ஐ அமைப்பு : பலியாகும் அப்பாவி மக்கள்

afganistan taliban bombblast
By Irumporai Aug 27, 2021 05:52 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம் என தாலிபன்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு பதட்டம் அதிகமாகியுள்ளது.இதனால் ஆப்கானில் இருந்து மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன .

இதனிடையே இந்த குண்டு வெடிப்பு குறித்து தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜாபியுல்லா முஜாயித் தெரிவித்துள்ளதாவது, காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம் என கூறியுள்ளார்.

இது குறித்து அமெரிக்காவுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தோம். வெளிநாட்டவர் அனைவரும் வெளியேறிவிட்டால் அதன் பிறகு காபூலில் ஒரு குண்டு கூட வெடிக்காது. ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் (தாலிபன்கள்) எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜாபியுல்லா முஜாயித் கருத்தின் படி பார்த்தால் மீண்டும் ஐ.எஸ்.ஐ அமைப்பு தாலிபன்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர் சர்வதேச வல்லுநர்கள்.