தாலிபான்களின் முக்கிய தலைவர் மரணம்? - வெளியான அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் தாலிபான் அமைப்பின் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாலிபான்களின் தலைவராக இருந்த முல்லா அக்தார் மன்சூர் அமெரிக்கப் படைகளின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அந்த இயக்கத்தை ஹைபதுல்லா அகுந்த்சாதா வழி நடத்தி வந்தார்.தாலிபான்களின் ஷரியா நீதிமன்றத் தலைவரான அகுந்த்சாதா கடந்த1990 ஆம் ஆண்டில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து மத விவகாரங்களில் முக்கிய முடிவு எடுத்து வந்தார்.
மேலும் இவர் தான் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை பொது இடத்தில் கொல்வது, பெண்களுக்கு கல்வி கற்க தடை விதித்தது போன்ற மிக கடுமையான சட்டங்களை அமல் படுத்தியவர்.இதனிடையே 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பின்னர் ஹைபதுல்லா அகுந்த்சாதா தலைவராக இருப்பார் என்றும் அவருக்கு கீழ் அரசு செயல்படும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் தாலிபான்கள் வெளியிட்ட அமைச்சரவைப் பட்டியலில் அகுந்த்சாதா பெயர் இடம் பெறவில்லை.
இந்நிலையில் அகுந்த்சாதா கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக தற்போது தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை தாலிபான்களின் மூத்த தலைவர் அமீர் அல் முஃமினின் ஷேக் உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல் துணை பிரதமராக அறிவிக்கப்பட்ட முல்லா பராடரும் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான தகவலை தாலிபான் அமைப்பினர் மறுத்துள்ளனர்.