ஆப்கான் மக்களே ..யாரும் விமான நிலையம் போகாதிங்க: தடை போட்ட தாலிபான்கள்

Afghanistan Kabul Taliban
By Irumporai Aug 25, 2021 09:08 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். ஆப்கானை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே இவர்களின் வாழ்க்கை குறிக்கோளாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணித்த சிலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெிரசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆப்கன் மக்கள் காபூல் விமான நிலையம் செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் செய்திதொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித், காபூல் விமான நிலையம் செல்லும் சாலை அடைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை ஆப்கானியர்கள் பயன்படுத்த முடியாது.ஆனால், வெளிநாட்டினர் இந்த சாலையில் விமான நிலையத்திற்கு செல்லலாம். காபூல் விமான நிலையத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது.ஏற்கனவே அறிவித்தபடி ஆக.,31க்குள் தனது மீட்பு பணியை அமெரிக்கா முடிக்க வேண்டும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்,ஆப்கானியர்கள் மீட்டு செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.