ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடைவிதித்த தாலிபான்கள்: காரணம் என்ன?

IPL 2021 Afghanistan Taliban
By Irumporai Sep 21, 2021 06:15 AM GMT
Report

ஆப்கானில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதித்தது தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானில் தற்போது மீண்டும் தாலிபன்கள் அதிகாரத்தை கைபற்றியுள்ளனர்,எதற்கு ஆப்கன் மக்கள் அஞ்சினார்களோ அவை ஒவ்வொன்றாக அங்கு நடந்து கொண்டிருக்கிறது.ஆப்கானில் .

ஆப்கானில் பெண் கல்விக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இசை, சினிமா என எல்லாவகையான கலைகளுக்கும் தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 நடைபெற்று வரும் நிலையில், அந்த போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வர்ணனையில் இஸ்லாம் எதிர்ப்புக் கொள்கைகள் இருக்கலாம் என்பதால் ஐபிஎல் வர்ணனைக்கு தடை விதிப்பதாகத் தாலிபான்கள் கூறியுள்ளனர். இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், பத்திரிகையாளருமான எம்.இப்ரஹிம் மோமந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வரலாற்றிலேயே முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்த நவம்பர் மாதம் இது நடைபெறவிருந்தது. ஆனால், மூத்த தலிபான் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் பெண்கள் விளையாடத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.

இதனால், ஆஸ்திரேலியா ஆப்கனுடனான டெஸ்ட் தொடரை ரத்து செய்யும் சூழல் எழுந்துள்ளது. முந்தைய தலிபான் ஆட்சியில் விளையாட்டு மைதானங்கள் அனைத்துமே தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இடமாக இருந்தது. இப்போது தாலிபான்கள் பெண்கள் விளையாட்டுக்குத் தடை என்றளவில் கெடுபிடியை ஆரம்பித்துள்ளது. இது எந்த அளவுக்குச் செல்லும் என்று தெரியவில்லை.