அராஜகத்தை துவக்கிய தாலிபான்கள் - 3 அப்பாவிகள் பலி: கதறும் மக்கள்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீண்டும் அவர்களின் அராஜகத்தை துவக்கியதில் அப்பாவி மக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் கடந்த முறை போலல்லாமல் அமைதியான ஆட்சியை வழங்க போவதாக தெரிவித்தனர். மேலும், தங்களை எதிர்த்து சண்டையிட்டவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கினர். இந்த நிலையில், சில இடங்களில் தாலிபான்களில் அராஜகம் துவங்கியுள்ளது.
வீடுகளை சோதனையிட ஒத்துழைக்காதவர்களை துப்பாக்கியால் கொடூரமாக தாக்கியுள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே ஜலாலாபாத் என்ற இடத்தில் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
அவர்கள் மீது தாலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பெண்களுடன் அமர்ந்திருந்தவரை தடியால் தாக்குவதும், மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவதும் என மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ஆப்கான் தேசிய கொடியை உயர்த்தி பிடித்த உள்ளூர் செய்தியாளரையும், பர்தா அணியாத இளம்பெண்ணையும் கதற கதற கொன்றுள்ளனர்.