ஆப்கானில் நடுரோட்டில் தலிபான்களின் கொடூரம்! வெளிவந்த அதிர்ச்சிகர வீடியோ காட்சிகள்

afghanistan
By Fathima Aug 20, 2021 08:14 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் தேசிய கொடியை வைத்திருந்த நபரை தாலிபான்கள் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பல கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

எதிரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவோம், பெண்களுக்கான அதிகாரம் நிலைநாட்டப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கினாலும் தாலிபான்கள் அதைமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில், தாலிபான்களுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில், அந்நாட்டின் சுதந்தர தினத்தை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 9) தேசிய கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அப்போது போராட்டக்காரர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். இந்நிலையில் கார் கண்ணாடிக்கு கீழே அந்நாட்டின் தேசிய கொடியை வைத்தபடி ஒருவர் காரை ஓட்டி வந்தார்.

அவரை வழிமறித்த தாலிபான்கள், காரில் இருந்து வெளியேற்றி கையை கட்டி, கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதே போல மற்றொரு பகுதியில் தேசிய கொடியுடன் சென்ற இளைஞர் ஒருவரை ஆயுத மேந்திய தாலிபான்கள், துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்.

இந்த அதிர்ச்சி வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.