“தலையை அகற்றுங்கள்..புறக்கணித்தால் கடுமையான தண்டனை” - ஆஃப்கனில் தலிபான்கல் புதிய உத்தரவு

taliban imposes new rule asks to remove head of showpiece
By Swetha Subash Jan 03, 2022 06:49 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

உருவ வழிபாடு என்பது இஸ்லாமத்தின் படி மன்னிக்க முடியாத பாவமாக கருதப்படுவதால் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் கடைகளில் வைத்திருக்கும் மொம்மைகளின் தலைகளை நீக்குமாறு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் அமைந்துள்ள கடைகளில் இருக்கும் உருவ பொம்மைகளின் தலைகளை அகற்றுமாறு ஆஃப்கானின் துணைத் தடுப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை புறக்கணிப்பவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என அமைச்சகத்துறை எச்சரித்துள்ளது.

“தலையை அகற்றுங்கள்..புறக்கணித்தால் கடுமையான தண்டனை” - ஆஃப்கனில் தலிபான்கல் புதிய உத்தரவு | Taliban Asks Garment Shop To Remove Showpiece Head

இந்த உத்தரவால் ஹெராட்டில் உள்ள வியாபாரிகள் பீதி அடைந்து இருப்பதாக அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது,

கடைகளின் பார்வைக்கு என்று வைத்திருக்கும் உருவ சிலைகள் எவ்வளவு விலை என்பதை மேற்கோள் காட்டிய வியாபாரி ஒருவர்,

“அச்சிலைகள் ஒவ்வொன்றையும் உருவாக்க 200 டாலர் வரை செலவு செய்யப்படும், மேலும் அவற்றின் தலைகளை அகற்றுவது என்பது பெரிய இழப்பு” என்று கூறினார்.

பழைய ஆப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலான பகுதிகளில் பெண்களுக்கான இடைநிலைப் பள்ளிகள் இன்னும் மூடப்பட்டு உள்ளன.

தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் படிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதற்கு பல நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர்.

மேலும் இசை மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பாகவும் தலிபான்கள் முக்கிய முடிவுகளை எடுத்தது. இனி மக்கள் தங்கள் வாகனங்களில் இசையை ஒலிக்கச் செய்யக்கூடாது என்று தலிபான் பல புதிய உத்தரவுகளை விதித்த வண்ணம் வருகிறது.