கோலி இதை செய்திருக்க கூடாது - தாலிபான் தலைவர் சொன்ன தகவல்!
தாலிபான் அமைப்பின் தலைவர் கோலி குறித்து பகிர்ந்த தகவல் கவனம் பெற்றுள்ளது.
கோலி ஓய்வு
விராட் கோலி, கடந்த மே 12ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கோலி எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அவர் திடீரென ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவரான அனாஸ் ஹக்கானி,
தாலிபான் ஆதங்கம்
"ரோஹித்தின் டெஸ்ட் ஓய்வு நியாயமானது தான். ஆனால் கோலியின் ஓய்வுக்குப் பின்னால் உள்ள காரணம் எனக்குப் புரியவில்லை. உலகில் கோலி போன்ற தனித்துவமானவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள்.
அவர் 50 வயது வரை விளையாட முயல வேண்டும் என்பதே என் ஆசை. ஒருவேளை இந்திய ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களால் கோலி விரக்தியடைந்திருக்கலாம். ஆனால், அவருக்கு இன்னும் நேரம் இருந்தது.
சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன்களை ஜோ ரூட் எப்படித் துரத்துகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதுபோல விராட் கோலியும் விளையாட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.