அந்த மாதிரி நேரத்துல துப்பாக்கியை எடுக்க தயங்காதீங்க : டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை
குற்றாவாளிகளை பிடிக்கச் செல்லும் போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில்ல் புதிதாக ரோந்து வாகன திட்டத்தை தொடங்கி வைத்தார், பின்னர் ஆட்ய்தப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு அறையினையும் திறந்து வைத்தார்.
நெல்லையில் கவனம்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு நெல்லை சரகப் பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளைத் தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்புத் திட்டத்தை தொடங்கியிருப்பதாக டிஜிபி தெரிவித்தார்.
துப்பாக்கி பயன்படுத்தலாம்
தமிழ்நாட்டில் கூலிப்படைக்கு எதிராக சிறப்புப் படை உருவாக்கப்பட்டு, கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காவல் துறையினரை தாக்கும் குற்றவாளிகள் மீது துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.