‘‘ஆட்சி மாறினால் ரெய்டு நடப்பது வழக்கம்தான் .. முடிந்தால் நடவடிக்கை எடுங்கள்’’ - அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்
ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்படி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் ஸ்மார்ட் சிட்டி ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. பெரிய ரெய்டுகள் நடக்கின்றன. ஜாக்கிரதை'' என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்தார்.
இதற்கு பதில் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள் என்று சவால் விடுத்துள்ளார் .
தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி. மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அதிமுக அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்மார்ட் திட்டபணிகள் குறித்து நிதியமைச் சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பணிகளில் தவறு செய்திருந் தால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
மேலும் பொத்தாம் பொதுவாகக் குறை சொல்லாதீர்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம்தான். எங்களுக்கு மடியில் கனமில்லை என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.