தாஜ் மஹாலில் நடிகர் அஜித் - ரசிகர்கள் உற்சாகம்
காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு நடிகர் அஜித் சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் சமீபத்தில் ரஷ்யாவில் படமாக்கப்பட்டது. இதற்காக நடிகர் அஜித் ரஷ்யா சென்றிருந்த நிலையில், படப்பிடிப்பை முடித்த பிறகு சில நாட்கள் தங்கியிருந்து பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்பிறகு சமீபத்தில்தான் சென்னை திரும்பினார். சில நாட்கள் ஒய்வில் இருந்த அஜித், துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிக்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித், ஒய்வு நேரத்தில் காதல் சின்னமான தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
தீயாய் பரவி வரும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. விரைவில் இந்த துப்பாக்கி சுடும் போட்டியை முடிக்கும் அஜித், சென்னை திரும்பியதும், தனது 61வது படத்திற்கான பணியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.