தாஜ்மஹால் வளாகத்தில் காவிக்கொடி அசைத்து வீடியோ எடுத்த நான்கு பேர் கைது
தாஜ்மஹால் வளாகத்தில் காவி வண்ண கொடியை அசைத்து காட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. மும்தாஜூக்காக ஷாஜகனால் கட்டப்பட்ட தாஜ்மஹால் காதல் சின்னமாக புகழப்படுகிறது.
இதனையடுத்து, தாஜ்மஹால் வளாகம் அருகே 4 பேர் திடீரென காவிக் கொடிகளை கையில் ஏந்தி அசைத்தபடி வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. காவிக் கொடிகளை காட்டி கோஷம் எழுப்பியது தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தாஜ்மஹால் வளாகத்தில் காவிக் கொடியை அசைத்து காட்டிய ஒரு பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று தாஜ்மஹாலுக்கு சென்று ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.