5 ஆண்டுகளாக முதலிடத்தில் தாஜ்மஹால் - என்ன காரணம் தெரியுமா?
வருமானத்தில் 5 ஆண்டுகளாக தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது.
டிக்கெட் விற்பனை
17ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால். 7 உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ASI) பாதுகாப்பில் உள்ள நினைவுச் சின்னங்களில்,
தாஜ்மஹால், 2020 முதல் 2024 வரையிலான (FY19-20 முதல் FY23-24 வரை) காலக்கட்டத்தில் டிக்கெட் விற்பனை மூலம் அதிக வருமானத்தை ஈட்டி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் முதலிடம்
அதன் அடிப்படையில் சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, டிக்கெட் விற்பனையின் அடிப்படையில் தாஜ்மஹால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், அதிக லாபம் ஈட்டும் இடமாகவும் உள்ளது.
டெல்லியின் குதுப் மினார் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது. இதில் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களில் கழிப்பறைகள், குடிநீர், நடைபாதைகள்,
பெஞ்சுகள், சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகள், கலாச்சார அறிவிப்பு பலகைகள், அறிவிப்பு பலகைகள், குப்பைத் தொட்டிகள், வாகன நிறுத்துமிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ASI வழங்கி வருகிறது.