நம்பலானாலும் அதான் உண்மை..!! 62 நாள் கோமா..!! சிக்கன் என்றவுடன் எழுந்த இளைஞர் !!
தைவான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கனால் கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமா நிலை
சில விஷயங்களை கேட்கும் போது நமக்கு இது போன்ற செயல்கள் உண்மையில் நடைபெறுமா? என்ற சந்தேகமே அதிகளவில் எழும். அப்படி ஒரு அதிசய விஷயம் தான் தற்போது தைவான் நாட்டில் நடந்துள்ளது.
தைவான் நாட்டின் Hsinchu County என்ற பகுதியில் ஜூலை மாதம் நடைபெற்ற விபத்தின் காரணமாக பைக்கில் சென்ற 18 வயது இளைஞர் பலத்த காயமடைந்துள்ளார். சிஹு எனப்படும் அந்த இளைஞர், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காப்பாற்றிய சிக்கன்
விபத்தின் அதிர்ச்சி இளைஞர் சிஹுவை கோமோவிற்கு தள்ளியுள்ளது. 62 நாட்கள் கடந்த நிலையில், தான் அந்த அதிசயம் நடந்துள்ளது. அதாவது சிக்கன் என்ற ஒரே வார்த்தை அந்த இளைஞரை கோமாவில் இருந்து சுய நினைவுவிற்கு திரும்ப உதவியுள்ளது. இது குறித்து சிஹுவின் அண்ணன் கூறுகையில், கோமாவில் இருந்து அவனுக்கு சிக்கன் பில்லெட் என்றால் ரொம்ப இஷ்டம்’ என சொன்னவுடன் சிஹுவின் நாடி துடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பித்தது என்றார்.
மேலும், சிக்கன் குறித்து பேசிய பிறகு நிதானமாக சிஹு சுய நினைவுக்கு வர ஆரம்பித்தார் என்றார் சிஹுவை கவனித்த செவிலியர்.
மறுபிறவி அடைந்துள்ள அவர் இதனை மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.