நான்சி பெலோசியின் தைவான் பயணம் ஜனநாயகம் பற்றியது அல்ல : சீனா குற்றச்சாட்டு

China Taiwan
By Irumporai Aug 03, 2022 09:44 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

அமெரிக்க சபாநாயகர் நான்சிபெலோசியின் தைவான் பயணம் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பெலோசியின் தைவான் பயண நோக்கம் ஜனநாயகம் பற்றியது அல்ல என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.

தைவான் சீனா  

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியான. உடனே சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது.

நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால், அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரித்ததும் நான்சி பெலோசி தைவான் சென்றார். பெலோசி தைவான் சென்றடைந்ததும் அந்நாட்டின் மீது சீனா வர்த்தக தடையினை விதித்தது. 

நான்சி பெலோசி வருகையினால் பதட்டம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தைவான் அதிபர் சைஇங்வென்னை சந்தித்த பிறகு பேசிய நான்சி ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை உலகம் இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நான்சி பெலோசியின் தைவான் பயணம் ஜனநாயகம் பற்றியது அல்ல :  சீனா குற்றச்சாட்டு | Taiwan Isnt About Democracy China

தைவான் மற்றும் உலக நாடுகளில் ஜனநாயக பாதுகாப்பு பற்றிய அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும் என அவர் பேசியுள்ளார். இதனால், ஒரே சீனா கொள்கைக்கு எதிராக மற்றும் சீன-அமெரிக்க உறவில் விரிசில் ஏற்படும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது. 

ஜனநாயகம் பற்றியது அல்ல  

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் கூறும்போது, பெலோசியின் தைவான் பயணத்தின் நோக்கம் ஜனநாயகம் பற்றியது அல்ல. அது சீனாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் விதிகளின் கீழான, ஒரே நிலப்பகுதியின் ஒற்றுமை பற்றியது என பேசியுள்ளார்.

நான்சி பெலோசியின் தைவான் பயணம் ஜனநாயகம் பற்றியது அல்ல :  சீனா குற்றச்சாட்டு | Taiwan Isnt About Democracy China

நான்சி பெலோசியின் தைவான் வருகையை முன்னிட்டு, தைவானை சுற்றி பல்வேறு பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவித்தது.

நான்சி பெலோசியின் தைவான் பயணம் ஜனநாயகம் பற்றியது அல்ல :  சீனா குற்றச்சாட்டு | Taiwan Isnt About Democracy China

இதனால், தைவான் ஜலசந்தி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. எனினும், தைவானை சுற்றி எந்தவித ராணுவ நடவடிக்கைகளையும் சீனா மேற்கொள்ளவில்லை.

சுதந்திர முறையில் கப்பல் பயணம் நடைபெறுவதற்கு ஏதுவாகவே சீனா செயல்படுகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.