பிரதமராகும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான் - உடனே சீனா செய்த காரியம்!
தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராகிறார்.
மோடிக்கு வாழ்த்து
நடப்பாண்டின் மக்காவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன் முடுவுகள் கடந்த ஜூன்4ம் தேதி வெளியானது அதில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.
அதன்படி மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகவிருக்கிறார். இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர். அந்த வகையில், சீனாவிடமிருந்து தனித்து இயங்க முயலும் தைவான் அதிபர் லாய் சிங்-தேவும் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது எக்ஸ் தளப்பக்கத்தில், `வேகமாக வளர்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்தோ பசிபிக் அமைதி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சீனா செய்த காரியம்
இந்தியப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்" என வாழ்த்தினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி,``அருமையான செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில், மோடியின் பதிலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங் கூறுகையில், "தைவான் பிராந்தியத்திற்கு அதிபர் கிடையாது. சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கும் நாடுகள் தைவான் அதிகாரிளுடன் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ உரையாடல்கள் அனைத்தையும் சீனா எதிர்க்கிறது.
உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான் பிராந்தியம் சீன குடியரசின் பிரிக்க முடியாத பகுதியாகும். 'ஒரே சீனா கொள்கை' என்பது சர்வதேச உறவுகள் மற்றும் நடைமுறையில் உள்ள ஒருமித்த கருத்துகள் மூலம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை ஆகும்.
இந்தியா தீவிர அரசியல் அர்ப்பணிப்புகளை செய்துள்ளது. தைவான் அதிகாரிகளின் அரசியல் கணக்கீடுகளை இந்தியா எதிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.