சீனாவுக்கு பதிலடி .. போர் ஒத்திகையில் ஈடுபட்ட தைவான் : தொடரும் போர் பதற்றம்
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனா போர் நடவடிக்கை
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த 2, 3-ம் தேதிகளில் தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரின் பயணத்தை ஆரம்பம் முதலே எதிர்த்த சீன அரசு, தற்போது தைவானை அச்சுறுத்தும் வகையில் ராணுவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது .
Taiwan begins live-fire artillery drill simulating defence against China attack: AFP #ChinaTaiwan pic.twitter.com/hDXb8Tq94i
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 9, 2022
தைவான் எல்லையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் நேற்று பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்தியது. அதிநவீன பாலிஸ்டிக், ஹைபர்சானிக் வகைகளைச் சேர்ந்த 11 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது.
பதிலடி கொடுக்கும் தைவான்
கடந்த 7-ம் தேதி வரை தீவிர போர் ஒத்திகையை நடத்துவோம் என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தைவானின் 6 எல்லைப் பகுதிகளையும் சீனாவின் முப்படைகளும் சுற்றி வளைத்துள்ளது.

இந்த நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும் பதிலடி அல்ல எனவும் தைவான் அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தற்போது, அமெரிக்கா, பிரிட்டன் உள்ள நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் சர்வதேச அளவில் போர் பதற்றம் நிலவிவருகிறது.