கடன் வாங்கிய பணத்தை வழிப்பறி செய்த கொடுமை- பெண் இன்ஸ்பெக்டர் கைது
கொள்ளை கும்பலுடன் சேர்ந்து கொண்டு 10 லட்ச ரூபாயை சுருட்டிய பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அர்ஷத், டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனியாக தொழில் செய்ய உறவினரிடம் 10 லட்ச ரூபாய் பெற்று, மேலும் கூடுதலாக கடன் பெற நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது நண்பர் பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இதை கவனித்து கொண்டிருந்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி, அர்ஷத் வைத்திருந்த பணத்தை பறித்துவிட்டு, ஸ்டேஷனில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.
மறுநாள் அர்ஷத் ஸ்டேஷனில் சென்று கேட்ட போது, உன் பணம் எல்லாம் இங்க இல்லை, இனி இங்கு வந்தால் உன் மேல் கஞ்சா வழக்கு போட்டுவிடுவேன் என்று வசந்தி மிரட்டியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வசந்தி சீட்டிங் கும்பலுடன் சேர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வசந்தியை கைது செய்த போலீசார், அந்த கும்பலை திவீரமாக தேடி வருகின்றனர்.