ஒலிம்பியாட் ஜோதிக்கு குத்தாட்டம் போட்ட தாசில்தார் , வைரலாகும் வீடியோ
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட்
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்க விழாவுக்கான அனைத்து விதமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான விழிப்புணர்வு ஜோதி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
குத்தாட்டம் போடும் தாசில்தார்.. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு நடனமாடி வரவேற்பு..! திராவிட மாடல் அட காலக்கொடுமைட#Vaniyambadi | #ChessOlympiad | #Thasildar | #Dance pic.twitter.com/fmt4Z4wg7S
— Arumugam Mudaliyar (@ArumugamMudali1) July 27, 2022
குத்தாட்டம் போட்ட தாசில்தார்
அப்போது, வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பத் மற்றும் வருவாய்துறையினர் சக அலுவலர்களுடன் கிராமத்து குத்தாட்டம் போட்டு ஆரவாரத்துடன் ஒலிம்பியாட் ஜோதியை உற்சாகமாக வரவேற்றனர்.
தாசில்தார் போட்ட குத்தாட்டத்தை அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் தாசில்தார் குத்தாட்டம் போட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.