விருது தொகையினை திருப்பி கொடுத்த நல்லகண்ணு : பாராட்டிய முதலமைச்சர்

M K Stalin Independence Day
By Irumporai Aug 15, 2022 04:20 AM GMT
Report

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது 76 சுதந்திரத்தினமான இன்று தமிழ்க முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தகைசால் தமிழர் விருது

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து.

விருது தொகையினை திருப்பி கொடுத்த நல்லகண்ணு : பாராட்டிய முதலமைச்சர் | Tagai Sal Thamizhar Award Nallakannu

நிதி தொகையினை அரசுக்கு வழங்கினார்

சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு 2022-ம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

விருது தொகையினை திருப்பி கொடுத்த நல்லகண்ணு : பாராட்டிய முதலமைச்சர் | Tagai Sal Thamizhar Award Nallakannu

அதன்படி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில்  ரூ 10 லட்சம் நிதியும்  விருதும் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.  தகைசால் தமிழர் விருதினைபெற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு .

அரசு கொடுத்த 10 லட்சம் ரூபாய் நிதியுடன் தன் பங்காக 5000 ரூபாயை சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கினார்.