அரசு அதிகாரிகள் மட்டுமல்ல... என்னைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை!

By Swetha Subash May 28, 2022 07:50 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து அவதூறு செய்தி பரப்பப்படும் என பணம் கேட்டு மிரட்டியதாக பிரபல பத்திரிகை நிறுவனமான ஜூனியர் விகடன், விமர்சகர்களான மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது அந்நிறுவன அலுவலரான புருஷோத்தம குமார் என்பவர் கடந்த 21.05.2022 அன்று சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த விவகரம் பரபரப்பை கிளப்பியது, புகார் அளிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஒரு பிரபல செய்தி ஊடகத்தின் மீது வழக்கு பதிந்தது பெரும் சர்சையானது.

இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் , ஜிஸ்கொயர் நிறுவனம் குறித்து அவதூறு செய்தி பரப்பப்படும் என பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஆதாரம் இல்லாததால் ஜூனியர் விகடன் இயக்குனர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர்,மாரிதாஸ் போன்றவர்களின் பெயர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது எதனால், உண்மையில் இதில் நடந்தது என்ன ? வேண்டுமென்றே காவல்துறை இவர்களை அச்சுறுத்துகின்றதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நமது ஐபிசி தமிழ் மெய்பொருள் நிகழ்ச்சியில் நெறியாளர் லியோ எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார் தடா ரஹீம்.