சச்சின், விராட் கோலி ட்வீட்டுக்கு டாப்ஸி பன்னு பதிலடி

system religion farmer
By Jon Feb 05, 2021 02:57 AM GMT
Report

இந்தியாவில் நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது. ஹாலிவுட் பாடகர் ரிஹானா வேளாண் சட்டங்கள் பற்றி ட்வீட் செய்த பிறகு பல்வேறு சர்வதேச பிரபலங்கள் வேளாண் சட்டங்கள் குறித்த செய்திகளை பகிரத் தொடங்கினர். சர்வதேச அளவில் விவசாயிகளின் போராட்டம் பேசு பொருளானது.

இதற்கு இந்திய அரசு கடுமையான எதிர்வினையாற்றியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் தொடங்கி விராட் கோலி வரை பல்வேறு பிரபலங்களும் மத்திய அரசின் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.

இதற்கு பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒரு ட்வீட் உங்களுடைய ஒற்றுமையை சீர்குலைக்கிறது என்றால், ஒரு நகைச்சுவை உங்களுடைய நம்பிக்கையை பொய் ஆக்குகிறது என்றால்,


ஒரு நிகழ்ச்சி உங்களுடைய மத நம்பிக்கை அச்சுறுத்துகிறது என்றால், உங்களுடைய நம்பிக்கைகளை நீங்கள் தான் வலுப்படுத்த வேண்டும். மற்றவர்களின் பிரச்சாரத்திற்கு ஊதுகுழலாக மாறக்கூடாது” என்றுள்ளார்.