கல்யாணத்திற்கு ரெடியான டாப்ஸி; அதுவும் 10 வருஷமா.. மாப்பிள்ளை இவரா?

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை டாப்ஸியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை டாப்ஸி
நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
தமிழில் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை,கேம் ஒவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக டாப்ஸி விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்தார்.
திருமணம்?
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்த டாப்ஸி, சாஷ்டே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவை 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
அவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். ராஜஸ்தான், உதய்பூரில் இவர்கள் பிரம்மாண்டமாக திருமணம் செய்யவுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருமண தகவல் குறித்து அறிந்த ரசிகர்கள் டாப்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.