கர்ப்பமான பிறகுதான் கல்யாணம் பண்ணுவேன் - ஷாக் கொடுத்த பிரபல நடிகை!
நடிகை டாப்ஸி திருமணம் குறித்த பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
நடிகை டாப்ஸி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் வலம் வருபவர் நடிகை டாப்ஸி. தமிழில் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை,கேம் ஒவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்த டாப்ஸி, சாஷ்டே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடித்த மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன.
திருமணம்
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது, அவருடைய அடுத்த விடுமுறை பயணம் எங்கே, அடுத்த படங்களின் அப்டேட் என பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டனர்.

அந்த வரிசையில், ஒரு ரசிகர், "உங்கள் திருமணம் எப்போது" என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்தவர், "நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. எனவே விரைவில் திருமணம் வாய்ப்பில்லை" என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil