பேட்மிண்டன் வீரருடன் திருமணம் - மெளனம் உடைத்த டாப்சி

Taapsee Pannu Indian Actress Marriage
By Sumathi Feb 24, 2023 08:25 AM GMT
Report

தனது திருமணம் குறித்த கேள்விக்கு டாப்சி பதிலளித்துள்ளார்.

டாப்சி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை,கேம் ஒவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக டாப்ஸி விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

பேட்மிண்டன் வீரருடன் திருமணம் - மெளனம் உடைத்த டாப்சி | Taapsee Open Up About Love And Marriage

இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், டாப்சியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நானும், மத்தியாஸ் போயும் 9 வருடங்களாக காதலித்து வருகிறோம். எனது சம காலத்து நடிகைகள் பலருக்கு திருமணம் முடிந்துள்ளது.

 திருமணம்?

ஆனால் நான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. நாங்கள் இவ்வளவு காலம் காதலித்து வருவது பெரிய விஷயம். இந்த உறவில் இருந்து நாங்கள் விலக நினைக்கவில்லை.

பேட்மிண்டன் வீரருடன் திருமணம் - மெளனம் உடைத்த டாப்சி | Taapsee Open Up About Love And Marriage

எனது சொந்த வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் போட்டி எதுவும் இல்லை. எனது காதல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேச விரும்பவில்லை'' என பதிலளித்துள்ளார்.