நடிகை டாப்ஸி உட்பட முக்கிய பிரபலங்களின் வீடுகளில் வருமான வரிசோதனை

police heroine celebrity
By Jon Mar 03, 2021 07:28 PM GMT
Report

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது வீடு மற்றும் மும்பையில் இருக்கக்கூடிய அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.

பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், வருவாயை மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்த நிலையில், இச்சோதனை நடைபெற்று வருகிறதாம். சோதனையின் முடிவில் ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

எனினும் கடந்த அக்டோபர் 2018-ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது, சில ஆண்டுகளாகவே இந்த நிறுவனம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், வருமானவரித்துறையினரின் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.