டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் அணி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி இனி தொடர்ந்து பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஏராளமான மக்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அதேசமயம் உலக நாடுகள் அனைத்துடனும் நட்புறவு பாராட்ட விரும்புவதாகவும், ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழலாம் என்றும் தாலிபான் தெரிவித்திருந்தது.
இதனிடையே கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது தாலிபான் அமைப்பினர் விளையாட்டுகள் உட்பட பெரும்பாலான பொழுதுபோக்கு அம்சங்களை தடை செய்த நிலையில் ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி போட்டியில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்படி தாலிபான்களின் பிரச்னை ஒருபுறம் இருக்க, மறுபுறம் அந்நாட்டு அணிக்குள்ளேயே கடும் பிரச்சனை வெடித்துள்ளது. சமீபத்தில் டி20 உலகக்கோப்பைகான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.
ஆனால் அணித்தேர்வின் போது, ஒரு கேப்டனாக தன்னிடம் எந்தவொரு கருத்தையும் கேட்கவில்லை எனக்கூறி ரஷித் கான் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதற்கு எந்தவொரு வருத்தத்தையும், விளக்கத்தையும் தெரிவிக்காத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக புதிய கேப்டனை நியமித்தது.
அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் முகமது நபியை புதிய கேப்டனாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் ஆப்கானிஸ்தான் பெண்கள் அணியை தாலிபான்கள் அனுமதிக்காத காரணத்தால் ஆண்கள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.
இதனால் இதே காரணத்தைக் காட்டி டி20 உலகக்கோப்பையில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.