2-வது டி20 கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது.
இப்போட்டியில் இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்நிலையில், நேற்று 2-வது டி20 போட்டி லக்னோவில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.
இதனையடுத்து களத்தில் இறங்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. இதயைடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது.
இப்போட்டியில், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார். இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன.
India beat New Zealand by 6 wickets in the 2nd T2OI at Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow
— Sports Yaari (@YaariSports) January 29, 2023
⏺️ 3-match series level at 1-1#Cricket #INDVsNZT20 #T20Cricket #IndianCricketTeam #CricketTwitter #sports pic.twitter.com/XAeeAEErUO
Team India ?? beat New Zealand ?? by 6 wickets and level the 3 match series by 1-1. The final T20I will be played on Wednesday at Ahmedabad.
— Msports (@MsportsM88) January 30, 2023
Who will win the final T20I?
To read more please visit our website#M88Sports #Cricket #T20Cricket #India #IndvsNz pic.twitter.com/wIv5sSrnaI