இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் - விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா -
நியூசிலாந்து இடையிலான முதலாவது T20 உலக கோப்பை போட்டி வரும்18-ந் தேதி வெலிங்டனில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணியில் இடம் பெறும் வீரர்கள்
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் இடம் பெறும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த பட்டியல் -
#TeamNewZealand squad against #TeamIndia for ODI and T20i. #INDvsNZ pic.twitter.com/D9IWN9j5eR
— LAYLA? (@Layla_Crunchy) November 15, 2022
New Zealand Have Announced Squads for 3 ODIs & 3 T20Is Against India#indvsnz pic.twitter.com/zv94SXVz4K
— Duniya-e-Cricket (@DuniyaeCricket2) November 15, 2022