முக்கிய வீரரை கழட்டிவிட்ட பாகிஸ்தான் - இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 பேர் இவர்கள் தான்
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டத்தில் பாகிஸ்தானின் ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வென்று உற்சாகத்துடன் உள்ள நிலையில் சூப்பர் 12 சுற்றில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 12 பேர் கொண்ட அணியின் பட்டியலை அறிவித்துள்ளார். அதன்படி பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கட் கீப்பர்), ஃபாக்கர் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹஃபீஸ், மாலிக், அசிஃப் அலி, ஷதாப் கான் (துணை கேப்டன்), இமாத் வசீம், ஹாசன் அலி, ஷாஹென் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் ஆடும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முக்கியமாக பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஃபகார் சமானுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் முன்னதாக பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட டி20 அணியிலேயே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனுபவ வீரர்களான முகமது நவாஸ், சர்ஃப்ராஸ் அகமது, முகமது வசீம் ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை. இதில் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணியை வழிநடத்தியவர் தான் சர்ஃப்ராஸ் அகமது. தற்போது அவரையே அணியில் இருந்து நீக்கியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
