டி20 உலகக்கோப்பை நடைபெறும் தேதி இதுதானா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
T20 wold cup 2021
பிசிசிஐ
By Petchi Avudaiappan
20 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மே மாதம் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது.
இது முடிந்ததும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பையை பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு விரைவில் பிசிசிஐ கடிதம் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.