டி20 உலக கோப்பை யாருக்கு?-பாகிஸ்தான், இங்கிலாந்து பலப்பரீட்சை

England Cricket Team T20 World Cup 2022 Pakistan national cricket team
By Irumporai Nov 13, 2022 02:00 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நடைபெறுகிறது.இன்று நடக்கவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தானும் மோதுகின்றது.

 டி 20 உலக கோப்பை

டி 20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இதுவே மூன்றாவது முறையாகும்.

டி20 உலக கோப்பை யாருக்கு?-பாகிஸ்தான், இங்கிலாந்து பலப்பரீட்சை | T20 World Cup Pakistan Vs England In The Final

கடந்த 2009 -ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை லீக் சுற்றில் , பாகிஸ்தான் ,இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த போதும் கோப்பையினை வென்றது.

இங்கிலாந்து பாகிஸ்தான் பல பரீட்சை

இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கோப்பையினை வெல்ல இரு அணிகளுக்கிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் போடியானது இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.