டி20 உலக கோப்பை இறுதி போட்டி : மிரட்டிய இங்கிலாந்து, திணறிய பாகிஸ்தான்

T20 World Cup 2022
By Irumporai Nov 13, 2022 10:02 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தற்போது மோதுகின்றன

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக உள்ளதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என கூறப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

டி20 உலக கோப்பை இறுதி போட்டி : மிரட்டிய இங்கிலாந்து, திணறிய பாகிஸ்தான் | T20 World Cup Pakistan England

இதனால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் பாபர் களத்தில் உள்ளனர், ஐந்து ஓவர் முடிவில் 30 ரன்கள் எடுத்தனர். 18.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான் அணி 129 ரன்கள் எடுத்து.

இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 4 ஓவர்களில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி ரிஸ்வான் 15 ரனகளும்பாபர் 32 ரன்களும் முகமது ஹாரிஸ் 8 ரன்களும் எடுத்து அவ்ட்டாகினர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி