டி20 உலகக் கோப்பை போட்டிகான இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆகஸ்ட் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் புதிய சீருடையை கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ராகுல், பும்ரா ஆகியோர் அணிந்து அறிமுகம் செய்யும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இந்தச் சீருடையை இந்திய அணியின் பயன்படுத்திக்கொள்வார்கள். இதையடுத்து புதிய சீருடை பற்றிய தங்கள் கருத்துகளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்