டி20 உலகக்கோப்பை: ஒரே குரூப்பில் இந்தியா பாகிஸ்தான் !

t20worldcup indiapakistan samegroup
By Irumporai Jul 16, 2021 12:24 PM GMT
Report

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை வரை நடைபெறுகிறது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் ஆகிய நான்கு பகுதிகளில் இந்த தொடர் நடக்கவுள்ளது. முதல் சுற்று போட்டியில், பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

முதல் சுற்று போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டியில் பங்குபெறும் அணிகளை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அணிகள்.

இந்த நிலையில் மார்ச் 20, 2021 அன்று இருந்த டி20 தரவரிசையின் அடிப்படையில் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி முதல் இரு இடங்களில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளும்

அதற்கடுத்த இடங்களில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் தரவரிசையில் இடம்பெற்றன.

டி20 உலகக்கோப்பை: ஒரே குரூப்பில்  இந்தியா பாகிஸ்தான் ! | T20 World Cup India And Pakistan Same Group

இதன் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது.