இன்று முதல் டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று - வெற்றி பெறுவது யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான குரூப் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஏழாவது இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடவுள்ளன. இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 8 அணிகள் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். இன்று நடைபெறும் முதல் தகுதி சுற்றுப் போட்டியில் ஓமன் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினியா களமிறங்குகிறது.

இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்