இன்று தொடங்குகிறது T20 World Cup

T20 World Cup 2026
By Fathima Feb 07, 2026 05:06 AM GMT
Report

பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் சனிக்கிழமை (பிப். 7) தொடங்கி, மாா்ச் 8 வரை நடைபெறவுள்ளது.

முதல் நாளில் நடைபெறும் 3 ஆட்டங்களில் கடைசியாக, நடப்பு சாம்பியனான இந்தியா - அமெரிக்காவுடன் மோதுகிறது.

முதல் இரு ஆட்டங்களில், நெதா்லாந்து - பாகிஸ்தான், ஸ்காட்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்கின்றன.

இன்று தொடங்குகிறது T20 World Cup | T20 World Cup Begins Today

பாகிஸ்தானின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளன. போட்டியில் பங்கேற்றுள்ள 20 அணிகளும், தலா 5 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பா் 8 கட்டத்துக்குத் தகுதிபெறும்.

அதில், 8 அணிகளும் தலா 4 வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்படும். அந்த சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.

குரூப் ‘ஏ’-  இந்தியா பாகிஸ்தான் அமெரிக்கா நெதா்லாந்து நமீபியா

குரூப் ‘பி’ - ஆஸ்திரேலியா இலங்கை அயா்லாந்து ஜிம்பாப்வே ஓமன்

குரூப் ‘சி’ - இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் நேபாளம் இத்தாலி ஸ்காட்லாந்து

குரூப் ‘டி’ - நியூஸிலாந்து தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் கனடா ஐக்கிய அரபு அமீரகம்

இன்று தொடங்குகிறது T20 World Cup | T20 World Cup Begins Today