Thursday, May 8, 2025

புதிய வடிவம் பெறப்போகும் டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகள் - முழு விவரம் இதோ...!

Cricket T20 World Cup 2022
By Nandhini 2 years ago
Report

புதிய வடிவம் பெறப்போகும் டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகளின் முழு விவரம் வெளியாகியுள்ளது. 

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றோடு நிறைவடைந்தது.

இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

t20-world-cup-2024-20-teams-will-play-matches

புதிய வடிவம் பெறும் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - 

இந்நிலையில், அடுத்த டி20 உலகக்கோப்பை 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 55 போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிக்கு நேரடியாக 12 அணிகள் முன்னேறி இருக்கின்றன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

அடுத்த டி20 உலகக்கோப்பை புதிய முறையில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலந்து கொள்ளும் 20 அணிகளும் ஒரு குரூப்பிற்கு 5 அணிகள் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட உள்ளது. அந்த குரூப்பில் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

இதையடுத்து ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமாம். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளூம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த சூப்பர் 8 சுற்றில் மோத வேண்டும்.

சூப்பர் 8 சுற்றின் முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிச் செல்லும்.