NO Ball கொடுத்த நடுவர் - கடுப்பில் வாக்குவாதம் செய்த ஷகிப் - சமாதானப்படுத்திய கோலி - வைரல் வீடியோ
நேற்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு NO Ball கொடுத்த நடுவரிடம் கேப்டன் ஷகிப் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரை விராட் கோலி சமாதானப்படுத்தினார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.
வங்காள தேசத்தை வீழ்த்திய இந்தியா மாபெரும் வெற்றி
நேற்று அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. இப்போட்டியின் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
ஷகிப்பை சமாதானப்படுத்திய வீராட் கோலி
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இந்திய அணியின் இன்னிங்சில் 16வது ஓவரின் போது வங்காளதேச வீரர் ஹசன் மகமுத் 2வது முறையாக பவுன்சர் பந்தை வீசினார்.
அப்போது, கிரிக்கெட் விதிகளின்படி 1 ஒவருக்கு 1 பவுன்சர் மட்டும் தான் அனுமதிக்கப்படும். ஆனால், 2வது முறை வீசினால் அதற்கு நோ பால் என்று அறிவிக்கப்பட்டு, ஃபிரி ஹிட் வழங்கப்படும்.
இந்த விதியின் காரணத்தால், நடுவரிடம் விராட் கோலி நோ பால் கேட்டார். இதற்கு நடுவர்கள் நோ பால் வழங்கி ஃபிரி ஹிட் கொடுத்தனர்.
கோலி கேட்ட பிறகு ஃபிரி ஹிட் கொடுக்கப்பட்டதாக கருதி அதிருப்தி அடைந்த வங்காளதேச கேப்டன் ஷகிப் நடுவர்களிடம் முறையிட சென்றார்.
அப்போது, ஷகிப் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது அவர் அருகே வந்த கோலி அவருடன் சில நொடிகள் விவாதம் நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பினார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.