'பார்ம்' தற்காலிகமானது... ஆனால் உங்க 'கிளாஸ்' நிரந்தரமானது.. - தன் சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு ஜெயவர்தனே வாழ்த்து
'பார்ம்' தற்காலிகமானது... ஆனால் உங்கள் 'கிளாஸ்' நிரந்தரமானது.. என்று தன் சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
வங்காள தேசத்தை வீழ்த்திய இந்தியா மாபெரும் வெற்றி
நேற்று முன்தினம் அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது.
இப்போட்டியின் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
சாதனை படைத்த விராட் கோலி
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இப்போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 64 எடுத்திருந்தார். இது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோலியின் 3வது அரைசதமாகும்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 1017* ரன்களை கடந்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
வாழ்த்து கூறிய ஜெயவர்தனே
T20 உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே-வை (1016 ரன்கள்- 31 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், "சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும். எப்போதாவது யாரோ ஒருவர் என் சாதனையை முறியடிப்பார் என்று நினைத்தேன். அதை விராட் கோலி செய்துள்ளார்.
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் போராட்ட குணத்தை வெளிபடுத்தி இருக்கிறீர்கள். 'பார்ம்' தற்காலிகமானது. ஆனால் உங்கள் 'கிளாஸ்' நிரந்தரமானது" என்றார்.
MILESTONE ALERT ?
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2022
Virat Kohli becomes the leading run-scorer in ICC Men's #T20WorldCup history, overtaking Mahela Jayawardena ?#INDvBAN pic.twitter.com/xDO0HNK5o3